நிக்கவெரட்டிய, கந்தேகெதர பிரதேசத்தில் இன்று (26) இடம்பெற்ற எரிவாயு தாங்கி வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் குறித்த வீட்டில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிப்பு சம்பவத்தின் போது தாயும் தந்தையும் வயல்வெளிக்கு சென்றிருந்ததாகவும், மூத்த பிள்ளை பாடசாலையிலும் இரண்டாவது பிள்ளை உறவினர் வீட்டில் இருந்ததாலும் எவ்வித உயிர் பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எரிவாயு தாங்கி வெடித்ததால் ஏற்பட்ட தீயினால் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளன. எரிவாயு வெடித்ததால் ஏற்பட்ட வாயு கசிவினாலா அல்லது வேறு காரணத்தினால் இந்த சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸாா் தெரிவித்தனா்.