இதுவரை ஆரம்பிக்கப்படாதுள்ள 6,7,8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக புதிய சுகாதார விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியா் நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தாா்.
பாடசாலை மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானால் செயற்பட வேண்டிய விதிமுறைகள் உள்ளடங்கிய வழிமுறைகளை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டாா்.
20 வயதுக்கும் மேற்பட்ட ஏனைய நோய் தாக்கத்துக்கு உள்ளானவர்களுக்காக மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தா்.
இதுதொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
கொரோனா கொத்தணிகள் உருவாகும் எச்சரிக்கை தன்மை கொண்ட பிரதேசங்களில் விரைவாக மூன்றாம் கட்ட தடுப்பூசி பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினாா்.