Our Feeds


Thursday, November 11, 2021

SHAHNI RAMEES

அக்கரைப்பற்று கிரிக்கெட் அணி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்குத் தெரிவு

 

இளைஞர் விவகார விளையாட்டுத் துறை  அமைச்சினால் 33ஆவது தேசிய விழாவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கிரிக்கட் போட்டியில் அக்கரைப்பற்று பிரதேச செயலக இளைஞர் கழகங்களின் அணி முதலாமிடம் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.

இப்போட்டியானது வரிப்பத்தாஞ்சேனை பொது மைதானத்தில் இடம்பெற்றதுடன் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேச செயலக அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் கழகங்களின் அணியும் அக்கரைப்பற்று பிரதேச செயலக இளைஞர் கழகங்களின் அணியும் தெரிவாகி மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று அணி 05 ஓவர் முடிவில் 02 விக்கட் இழப்புக்கு 65 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை அணி 05 ஓவர் முடிவில் 05 விக்கட் இழப்புக்கு 57 ஓட்டங்களை எடுத்தது.

இதனடிப்படையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக அணி 07 ஓட்டங்களால் வெற்றிபெற்று இம் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் விளையாட்டு விழா  கிரிக்கட் போட்டியில் பங்கேற்கவுள்ளது.

(அக்கரைப்பற்று  நிருபர்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »