எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை காணப்படுகிறது.
ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமையை எவராலும் தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திர கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு நேற்று புதன்கிழமை கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு அதற்கு ஏற்றாட் போல் ஏற்பாடுகளை செய்திருக்கலாம். காரணம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவை தொடர்பில் கவனம் செலுத்த முடியாது.
பெரும்பாலானவர்கள் ஒரே இடத்தில் கூடியிருக்கும் போது எவ்வாறு தொற்று பரவும் என்பதை அனைவரும் அறிவர். எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமையை எவராலும் தடுக்க முடியாது. நாம் வேறு பயணத்தை ஆரம்பிக்கவில்லை.
மாறாக கட்சியை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். கட்சியை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.