எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு எரிபொருளை விநியோகிக்க முடியும்
என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.எனினும், எரிபொருளின் விலையை அதிகரிக்கும் தேவை தற்போது எழுந்துள்ளதாக கூட்டுதாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளுக்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில ஆரம்பித்துள்ளார்.
இந்த விடயத்தை கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உதய கம்மன்பில உறுதிப்படுத்தினார். (