Our Feeds


Saturday, November 6, 2021

SHAHNI RAMEES

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் நியமனம்

 

களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக களனி ரஜ மஹா விகாராதிபதி பேராசிரியர் வண. கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரர் நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக கடமையாற்றிய கலாநிதி வண. வெலமிடியாவே குசலதம்ம தேரர் கடந்த தினம் காலமானார்.

இதனையடுத்து வெற்றிடமாகி இருந்த களனி பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »