காலி-பத்தேகம பொது மயானத்திற்கு அருகில் உள்ள காணியொன்றிலிருந்து மேலும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கமைய குறித்த பகுதியில் 9 மில்லிமீற்றர் ரக 45 தோட்டாக்களும், 38 மில்லிமீற்றர் ரக 13 தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு நடவடிக்கைகளின் போது இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து ரத்கம விசேட அதிரடி படையினால் குறித்த காணியில் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது மேலும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.