2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட அக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கவுள்ளனர்.
வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிரணிகள் பாதீட்டை எதிர்த்து வாக்களிக்கவுள்ளன. பாதீடுமீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பரம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.