Our Feeds


Friday, November 12, 2021

SHAHNI RAMEES

ஹெட்ரிக் சிக்ஸர்களுடன் பலமிக்க பாகிஸ்தானை பந்தாடி இரண்டாவது இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவுஸ்திரேலியா

 

பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2021 ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஏழாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக நியூசிலாந்து அணி தகுதிபெற்ற நிலையில் இரண்டாவது அணியை தேர்வு செய்கின்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி மொஹமட் றிஸ்வான், பகார் ஷமான் ஆகியோரின் அதிரடி மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களை குவித்தது.

177 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்ற இறுதிப்போட்டியில் ஆஸி. – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அவுஸ்திரேலிய அணி கடந்த 2010ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியிருந்;தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »