அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மருந்து
உற்பத்தி, விநியோக மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அதற்கமைய, 60 அத்தியாவசிய மருந்துகளின் 131 வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மருந்து வகைகளை எந்தவொரு காரணத்தக்காகவும் நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலைக்கு அதிக விலையில் விற்பனை செய்வது சட்டவிரோத செயற்பாடாகும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
நிர்ணய விலையை மீறி மருந்துகள் விற்பனை செய்யப்படுமாக இருந்தால் complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்குமாறு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க தெரிவித்துள்ளாா்.
டொலரின் பெறுமதி அதிகரிப்புக்கமைய கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9 சதவீதம் விலை அதிகரிப்புக்கான அனுமதி கிடைத்திருந்ததாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ள மருந்து வகைகளின் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.