நுவரெலிய பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது.
தமது மரக்கறி வகைகளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் வழங்க மறுத்ததை அடுத்தே, பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது.
தமது விவசாய நிலங்களுக்கு தேவையான உரம் மற்றும் கிருமி நாசினி கிடைக்காததை அடுத்தே, விவசாயிகள் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.
இந்த நிலையில், கொழும்பு மெனிங் சந்தைக்கு இன்று மிக குறைந்தளவான மரக்கறிகளை கொண்டு வரப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலைய ஒன்றியத்தின் தலைவர் அருண ஷாந்த ஹெட்டியாராட்ச்சி தெரிவித்துள்ளார். (