Our Feeds


Saturday, November 6, 2021

ShortNews Admin

சண்டையை விலக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தாய் அடித்துக்கொலை.



வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில், மூன்று பிள்ளைகளின் தாயொருவர் பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் (04) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளார். 


தனது குடும்பத்துக்கும் அயல் குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பை விலக்குவதற்கு சென்ற போதே இவ்வாறு பொல்லால் தாக்கப்பட்டு அவர் மரணமடைந்துள்ளார்.


சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வட்டவளை பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 


ஹட்டன் நீதவானின் மரண விசாரணைகளின் பின்னர், உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் எனவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் தடயவியல் பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »