தனது நண்பரை கொலை செய்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நபரொருவருக்கு மரண தண்டனை வழங்கிய சம்பவமொன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, கம்பஹா இலக்கம் 01 மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க சம்பந்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.
2006ம் ஆண்டு தனது நண்பர் ஒருவரை படுக்கையறையில் வைத்து கொலை செய்ததாக 42வயதுடைய, ஆணமடுவ பிரதேசத்தைச் மஹிந்த ரத்நாயக்க என்பவருக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்துவிட்டிவல, யடியன பிரதேசத்தில் அமைந்துள்ள தங்குமிடமொன்றில் தங்கியிருந்த 22 வயதுடைய சமிந்த பண்டார என்பவரைக் கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 30ஆம் திகதி அல்லது அந்த தினத்தை அண்மித்த காலப்பகுதியில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நபர் மற்றும் உயிரிழந்த நபர் ஆகிய இருவரும் ஒரு இடத்தில் பணியாற்றியுள்ளதுடன் குறித்த சந்தேக நபர் உயிரிழந்த நபரின் உறவுக்கார பெண் ஒருவரையே திருமணம் செய்திருந்துள்ளாா்.
குறித்த பெண்ணுக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என்று ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.