- வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். இதன் மூலம் குடும்பத்தில் உள்ள ஏனையவர்களுக்கும் தொற்று அபாயத்தைக் குறைக்க முடியும்.
- மெய்நிகர் சந்திப்புகள் வலுவாக ஊக்குவிக்கப்படுகின்றன.
- மண்டபம், நிகழ்விடத்தில் இடம்பெறும் நிகழ்வுகள், ஒன்றுகூடல்களில் நிகழ்விடத்தின் மொத்த கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கினரே பங்கேற்க முடியும். மொத்த பங்கேற்பாளர் தொகை 150,இற்கு மேற்படாமல் இருந்தல் வேண்டும்.
- உள்ளரங்குகளில் நிகழ்விடத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கினர் 100 பேருக்கு மேற்படாத வகையில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.
- வெளிப்புற தனிப்பட்ட கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
- வர்த்தக மையங்கள் சுகாதார அதிகாரிகளின் கடுமையான மேற்பார்வையின் கீழ் மொத்த வியாபாரத்திற்காக திறக்க அனுமதிக்கப்படும்
- உணவு கையாளும் நிலையங்களில் அதன் கொள்ளளவு திறனுக்கு மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்ற அனுமதிக்கப்படும். மொத்த நபர்களின் எண்ணிக்கை 75இற்கு மேற்படலாகாது.
- பலசரங்குக் கடைகள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் அதன் கொள்ளளவு திறனில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்படாதவர்கள் அனுமதிக்கப்படலாம்.
- வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 15 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படலாம். .மீதமுள்ள வாடிக்கையாளர்கள் மையங்களுக்கு வெளியே ஒரு மீற்றா் இடைவெளியைப் பேணக் கூடயவாறு வரிசையில் நிற்க வேண்டும்.
- சலூன்கள், தையலகங்களில் முன்கூட்டிய பதிவுகள் மூலம் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
- பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு தீா்மானிக்கும்
- பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், முன்பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
- பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து மானிய ஆணைக்குழு தீா்மானங்களை எடுக்கும்
- தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அதன் மொத்த கொள்ளளவு திறனில் 50% பேரை ஒரே நேரத்தில் அனுமதிக்கலாம்.
- நீதிமன்றங்கள் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ் செயற்பட வேண்டும்.
- திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களில் அவற்றின் மொத்த கொள்ளளவு திறனில் 50 வீதமானவர்களை மட்டுமே ஒரே நேரத்தில் அனுமதிக்க முடியும்.
- விளையாட்டு நிகழ்வுகளில் பார்வையாளர்கள் அனுமதி இல்லை.
- திருமண நிகழ்வுகளின்போது மண்டபத்தின் வழக்கமான கொள்ளளவு திறனில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க முடியும். எனினும் 100 பேருக்கு மேற்பட்டவர்கள் கூட அனுமதி இல்லை.
- வெளிப்புற நிகழ்வுகளில் 150 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
- இறுதிச் சடங்குகளில் ஒரே நேரத்தில் 20-க்கு மேற்படாதவர்கள் பங்கேற்க முடியும். அத்துடன், ஒருவர் இறந்து 24 மணி நேரத்திற்குள் இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்
Tuesday, November 16, 2021
வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்க்கவும் : புதிய சுகாதார நடைமுறை வழிகாட்டி இதோ!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »