வெலிகம பொலிஸ் பிரிவில் கப்பரதொட்ட – எவரிவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் இன்று (04) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த மூவர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கட்டடத்தின் சமையலறைப் பகுதியிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வாறிருப்பினும் அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மாத்தறை குற்ற விசாரணைப் பிரிவினரால் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடம்சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரி ஸ்தலத்துக்கு விரைந்து பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளார். வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.