மக்கள் முறைாயாக சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிட்டால், எதிர்வரும் புத்தாண்டுக்குள் நாட்டில் பதிவாகும்
கொரோனா நோயாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே, மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் பொதுபோக்குவரத்து சேவையில் சிறந்த முறையில் பின்பற்றப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் தற்போது மிகவும் மோசமடைந்து காணப்படுவதாகவும், மட்டுப்படுத்தப்பட்ட பயணிகளின் எண்ணிக்கைக்குப் பதிலாக ஆசன எண்ணிக்கைக்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர்.
எனவே, பொது போக்குவரத்துகளில் சுகாதார வழிகாட்டல்கள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.