தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில்
அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.சபையில் தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரங்கள் கிடைத்து வருவதாகவும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரசாயன உரம் இன்மையால் தேயிலை விவசாயிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து எதிர்க்கட்சியின் எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எடுப்பிய போது , அதற்கு பதிலளித்த ரமேஷ் பத்திரன, தேயிலை, தென்னை, இறப்பர் போன்றவற்றிலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வருமானம் கிடைத்துள்ளதாகவும், உரங்கள் தொடர்பில் நெகிழ்வாக இருக்க வேண்டிய இடங்களில் அரசாங்கம் அதனைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதுதொடரடைபில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பில்லியன் டொலர் வருமானத்துடன் தேங்காய் உற்பத்தியில் அதிகூடிய ஏற்றுமதி வருமானம் இந்த வருடம் கிடைக்கும். இந்த ஆண்டு றப்பர் உற்பத்தி மூலம் 1 பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேயிலையினால் கிடைக்கும் வருமானம் ஓரளவு குறைவடைந்திருந்தாலும் ஸ்திரமாக இருக்கிறது .
இந்த ஆண்டு ஏற்றுமதி விவசாயத்தின் மூலமான வருமானம் 800 மில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளது என்றாா்.