வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய சேயாசனைகளை நடைமுறைப்படுத்தவதற்கான தேவையான சட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட
ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பரந்துப்பட்ட கலந்துரையாடலை இன்று ஆரம்பித்துள்ளாா்.இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகள், அரச அதிகாரிகளின் ஓய்வூதிய வயதெல்லையை 65 வரையில் அதிகரித்தல் மற்றும் ஜனாதிபதி மற்றும் எம்.பிக்களின் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் கால எல்லையை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளாா்.
அரச துறையினரின் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிப்பதற்கான யோசனையை நடைமுறைப்படடுத்தும் திகதி தற்போது உறுதியாக குறிப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.