(மயூரன்)
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் குழந்தை ஒன்றை அந்தப் பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.
மட்டுவில் பகுதியில் 18 வயதான பெண் தனது பச்சிளம் ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு, குறித்த பெண்ணும் அவருடைய தாயாரும் முனைந்ததாகவும், அதன்போது குழந்தை அழுததால் தாம் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்டுக் காப்பாற்றியதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், குழந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயும் அவரது தாயாரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.