இந்தியாவில் உயிரிழந்த இந்நாட்டு பாதாள உலகக்குழுத் தலைவனாகக் கருதப்பட்ட அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மத்துமகே சந்தன லசந்த பெரேரா 2020 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி இந்தியாவின் கோயம்புத்தூரில் மாரடைப்பால் காலமானார்.
ஆனால் அவரது அடையாளத்தில் ஏற்பட்ட பிரச்சினையால், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த இந்திய அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் அவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.