Our Feeds


Tuesday, November 16, 2021

SHAHNI RAMEES

மரக்கறிகளின் விலைகள் இரு மடங்காக அதிகரிப்பு | காரணம் என்ன?

 

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.

சந்தையில் ஒரு கிலோ கிராம் போஞ்சி 500 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் கரட் 320 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் பீட்ரூட், கோவா, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் என்பன 240 ரூபாவுக்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர கறிமிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 170 ரூபாவாக அதிகரித்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் 25 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 4 இலட்சமாகக் குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »