அனுமதி எதுவுமின்றி ட்ரோன் கெமராவை அனுப்பி பாதுகாக்கப்பட்ட வலயத்தை ஒளிப்பதிவு செய்த மூவர் தெல்தெனிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.
நேற்று (13) விக்கோடரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் இராணுத்தின் இயந்திரவியல் காலாட் படையணி உள்ளிட்ட பிரதேசங்களில் குறித்த சந்தேகநபர்கள் இவ்வாறு எந்தவொரு அனுமதியுமின்றி ட்ரோன் கெமராவை செலுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காலாட் படையணியின் இராணுவ முகாம் அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொனாட்டுவ மற்றும் களனி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இன்று (14) சந்தேகநபர்களை தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது