கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது மது போதையில் வாகனம் செலுத்திய நான்கு சொகுசு வாகனங்களின் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் வர்த்தகர்கள், சட்டத்தரணிகள் என பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தலைவர்களின் புதல்வர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.