கொரோனாவின் புதிய வடிவமான ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
அதன்படி, அளவுக்கு அதிகமான சோர்வு, தசைகளில் வலி, கரகரப்பான தொண்டை, வறட்டு இருமல் ஆகியவை இதன் அடையாளங்களாகும் என்று ஒமைக்ரானுக்கு சிகிச்சையளிக்கும் தென்னாபிரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுவரை கண்டறியப்பட்ட பாதிப்புகள் யாவும் மிதமான பாதிப்புகளே என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் நோயாளிகளுக்கு ஏற்டவில்லை என்று கடந்த 10 நாட்களில் 30 பேருக்கு சிகிச்சையளித்த சிரேஷ்ட பெண் மருத்துவர் Angelique Coetzee தெரிவித்தார்.