Our Feeds


Thursday, November 18, 2021

SHAHNI RAMEES

வரவு-செலவு திட்டத்தின் பயனை நாட்டு மக்கள் வெகுவிரைவில் முழுமையாக பெறுவார்கள் - எஸ்.பி. திஸாநாயக்க

 

மக்களுக்கு மின்சாரம், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றை நிவாரண விலையில் வழங்குவது தவறானதாகும். இத்துறைகள் எதிர்க் கொண்டுள்ள நட்டம் நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான தடையாக காணப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ புத்திசாலித்தனமான முறையில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். வரவு-செலவு திட்டத்தின் பயனை நாட்டு மக்கள் வெகுவிரைவில் முழுமையாக பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு உலக நாடுகள் பாடசாலைகளை  மூடியதால் பெரும்பாலான மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிதக்கப்பட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள் ஆகவே நாட்டை முடக்காமல் இருப்பது அவசியமாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் தொடர்பில் அரசாங்கம், சுகாதார தரப்பினர், நாட்டு மக்கள் மற்றும் உலக சுகாதாரம் குறிப்பிடும் ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் எதிர்தரப்பினர் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்கள்.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு கடந்த இரண்டு வருடகாலமாக உலகில் பெரும்பாலான நாடுகள் தொடர்ந்து முடக்கப்பட்டு பாடசாலைகளும் மூடப்பட்டன.

விசேடமாக பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டதனால்  16 ஆவது இடத்தில் இருந்த தற்கொலையினால் பதிவாகும் மரணங்கள் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 80 சதவீதமானோர் பாடசாலை மாணவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டையும், பாடசாலைகளையும் மூட வேண்டாம் என உலக உளவியல் நிபுணர்கள் உலக அரச தலைவர்களிடமும், அரசாங்கங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கொவிட் தாக்கத்தின் காரணமாக சுமார் 2 வருட காலமாக எமது நாட்டு மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தன.

புதுவருட கொவிட் கொத்தணி பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து பாடசாலைகள் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் கல்வி செயற்பாடுகளில் ஆர்வமாக ஈடுப்படுகிறார்கள் அவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினரும், மக்கள் விடுதலை முன்னண்யினரும் போராட்டங்களில் ஈடுப்பட்டு கொவிட் வைரஸ் பரவலை தீவிரப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

தேசிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மிகவும் புத்திசாலித்தனமான முறையில்,நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.

அரச செலவு முகாமைத்துவம்,அரச செயற்திட்ட வினைத்திறன்,நிர்மானிப்புக்களுக்காக மக்களை ஊக்கப்படுத்தல், சமுர்த்தி செயற்திட்டத்தை அபிவிருத்தி செயற்திட்டமாக்கல் உள்ளிட்ட பல விடயங்கள் 2022 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. உற்பத்தி பொருளாதாரத்திற்காக பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொவிட் தாக்கத்தித்தினால் இறக்குமதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  அத்தியாவசிய பொருள் உற்பத்திகளுக்கும் பெருமவில் கேள்வி நிலவுகிறது. 

உலக சந்தையில் எரிபொருள், சமையல் எரிவாயு, ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது இப்பிரச்சினை இலங்கைக்கு மாத்திரம் வரையறுத்ததல்ல. எமது நாட்டில் நீர்,எரிவாயு.

எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவை நிவாரண அடிப்படையில் வழங்கப்படுகின்றமை தவறானதாகும். பெற்றோலியம், மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் துறை ஆகிய பிரதான துறைகளில் காணப்படும் நட்டம் நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான தடையாக காணப்படுகிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »