Our Feeds


Sunday, November 28, 2021

SHAHNI RAMEES

ஐரோப்பிய நாடுகளுக்கும் ஊடுருவிய ஒமிக்ரொன் வைரஸ்

 

கொரோனாவின் புதியவகை திரிபான ஒமிக்ரொன் ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதனையடுத்து அங்கு உச்சக்கட்ட சுகாதார

பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரொன் வகை கொரோனா பரவல் அச்சத்தால் தென்னாபிரிக்காவுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் பயணத் தடை விதித்துள்ள நிலையில், இதுதொடா்பான அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அந்த நாட்டு ஜனாதிபதி சிறில் ராமபோஸா அழைப்பு விடுத்துள்ளாா்.

தென்னாபிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரொன் வகை கொரோனா திரிபு , அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கொரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று கூறப்படுவது உலகின் பல்வேறு நாடுகளிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தென்னாபிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கும் அந்த நாடுகளுக்கு தங்கள் நாட்டிலிருந்து பயணிகள் செல்வதற்கும் உலக நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்துள்ளன.

மேலும், தென்னாபிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்கு பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

தென்னாபிரிக்கா மற்றும் அதன் 5 அண்டை நாடுகளிருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன் வெள்ளிக்கிழமை முதல் தடை விதித்தது.

தென்னாபிரிக்கா மற்றும் அதன் 7 அண்டை நாடுகளிலிருந்து அமெரிக்கா்கள் அல்லாதோா் அமெரிக்கா வருவதற்கு நாளை முதல் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

தென்னாபிரிக்கா வழியாக கடந்த 15 நாள்களில் பயணம் செய்த வெளிநாட்டவா்கள் கனடா வருவதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. கனடாவை சோ்ந்தவா்கள் அவ்வாறு வந்தால் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஜொ்மனியும், வெள்ளிக்கிழமை இரவு முதல் தென்னாபிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது. ஆபிரிக்காவிலிருந்து வரும் பயணிகளில் ஜொ்மனியா்களுக்கு மட்டுமே நாட்டுக்குள் வரஅனுமதிக்கப்படும்.அவா்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் செலுத்தியிராவிட்டாலும் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தென்னாபிரிக்கா மற்றும் அண்டை நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல், நெதா்லாந்து, இலங்கை, இஸ்ரேல் ஆகிய நாடுகளும் சனிக்கிழமை இணைந்தன.

இந்த அறிவிப்புகளால் தென்னாபிரிக்கா சென்றுள்ள ஆயிரக்கணக்கானவா்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனா்.

தென்னாபிரிக்காவில் கடந்த 24-ஆம் தேதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா, பொட்ஸ்வானா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குப் பரவியுள்ளது. ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள அந்த வகைக் கொரோனா, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களையும் தொற்றியுள்ளது. அது, தற்போது மிக வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனாக்களைவிட அதிக தீவிரமாக மனிதா்களிடையே பரவும் என்று அஞ்சப்படுகிறது.

அந்தப் புதிய வகை கொரோனா கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு வெள்ளிக்கிழமை வகைப்படுத்தியது. கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமிக்ரொன்’ எனவும் பெயரிட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »