கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள நாடு பூரகவும் உள்ள சகல பாடசாலைகளிலும் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதற்கு அமைவாக தரம் 10,11,12 மற்றும் 13 தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மாணவர்களை, பாடசாலைகளுக்கு அனுபுவது பெற்றோரின் பொறுப்பாகும் என்றும்அவர் கூறினார்.
மாணவர்களும் இதுதொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.
தரம் 9 க்கு உட்பட்ட அனைத்து வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்
இதேவேளை, ஆரம்ப பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. சுகாதார சிபார்சு கிடைத்தவுடன் தரம் ஒன்றில் இருந்து 9 வரையான வகுப்புக்ககளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.