மாத்தறை பொது வைத்தியசாலையின் பிணவறைக்குள் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு, எலி, கரப்பான்பூச்சி, உடும்புகள் மற்றும் பாறை உடும்புகள் போன்றன சடலங்களை உண்பதால் பிண அறையில் தொழி லாளர்கள் மற்றும் உயிரிழந்த வர்களின் உறவினர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பிணவறையின் இரும்புக் கதவு உடைந்துள்ளமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சடலத்தில் காது , மூக்கு போன்ற பகுதிகளை எலிகள் மற்றும் உடும்புகள் கடித்துள்ளதாக மலர்ச்சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இரும்புக் கதவு சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும், இது தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரியப்படுத்திய தாகவும் மாத்தறை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.