(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ள வழக்கில், குற்றப் பத்திரிகைகளின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகள் தயாராக இன்னும் சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக சட்ட மா அதிபர் சார்பில் இன்று (23) விசேட ட்ரயல் அட்பார் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர இதனை நீதிமன்றுக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து பிரதான பிரதிவாதியாக அரச தரப்பால் அறிமுகப்படுத்தப்படும் அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி உட்பட 25 பேருக்கு எதிராக தொடுக்கப்ப்ட்டுள்ள வழக்கு எதிர்வரும் 2022 ஜனவரி 12 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.