கனடாவுக்கான விசேட பயணம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோருக்கு அங்கிருக்கும் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் பலத்த வரவேற்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் இலங்கை முஸ்லிம் பேரவை - SLMEC அமைப்பினால் நேற்று காலை நடத்தப்பட்ட நிகழ்ச்சில் எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.
இலங்கை முஸ்லிம்கள் பிரச்சினை மற்றும் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இங்கு பேசப்பட்டமை மிக முக்கிய அம்சமாகும்.
இலங்கை முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் சமூக பிரச்சினைகள் விவகாரத்தில் கவனமற்றிருப்பதுடன் தமது சுகபோகங்களுக்காக சமூக உரிமைகளை விட்டுக் கொடுத்து சுயநல அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக குரலெழுப்பி வரும் த.தே.கூ வின் எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோருக்கு இப்படியான வரவேற்பு புலம்பெயர் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.