ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதியொருவர் பிரதேச மக்களினால் மின்கம்பத்தில் கட்டப்பட்ட சம்பவமொன்று களுத்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மதுபானம் அருந்திவிட்டு, கல்பாத்த பிரதேசத்தில் பிரதேசவாசிகளுக் அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையினாலேயே பாணந்துறை பிரதேசத்தில் அவர் இவ்வாறு மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ளாா். பிரதேச சபை உறுப்பினர் ஒருவரையே இவ்வாறு மின்கம்பத்தில் கட்டுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்
குறித்த உறுப்பினா் மின்கம்பத்தில் கட்டப்பட்டு பின்னா் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பிரதேச சபை உறுப்பினர், மேலும் சிலருடன் கல்பாத்த பிரதேசத்தில் மது அருந்தியுள்ளதுடன் கல்பாத்த, பஹுருபொல பிரதேசவாசிகளிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
பிரதேசத்தில் வசிக்கும் சிலர் கயிறுகளால் அருகிலுள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து பொலிஸ் அவசர இலக்கத்துக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நாகொட வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று (22) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.