ஹட்டன் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் முட்டை,கோழி இறைச்சி ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதுடன் இந்த நிலைமையின் காணமாக அந்த பிரதேச நுகர்வோர் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேச மக்கள் ,
முட்டையொன்றின் விலை 22 ரூபாவிலிருந்து 24 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கோழி இறைச்சி 800 ரூபாயிலிருந்து 850 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.இதனால் நாங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளோம்.
முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரித்துள்ளமையால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விலை அதிகரிப்பட்டுள்ளமையினால் முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் வியாபார நடவடிக்கைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் இந்த சூழ்நிலையின் காரணமாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
(மனுர சுதத்)