ஜனாதிபதியினால் தற்போதைய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவித்து அதன் செயற்பாடுகளை கைவிடுமாறு
தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தொழிற்சங்கவியலாளர்களின் தேசிய முன்னணியின் செயலாளர் கபில ரேணுகவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.