ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளக தாக்குதல்களை மேற்கொள்ளும் கோட்பாடும் இரட்டை நிலைப்பாடும் அரசாங்கத்தின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்டிக்கு முடிந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை அச்சுறுத்துவதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
உள்ளக தாக்குதல்களை மேற்கொள்வது ஆரம்பத்திலிருந்தே சுதந்திரக் கட்சி கொள்கையாக பின்பற்றி வருவதாகவும் அந்த நிலைமையே எதிர்காலத்திலும் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.