Our Feeds


Sunday, November 14, 2021

SHAHNI RAMEES

பாடசாலை மாணவர்களுக்கு பிரதேச செயலகம் விடுத்துள்ள அறிவித்தல்...

 

பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் வெள்ளத்தினால் மூழ்கி பழுதடைந்திருந்தால் அதுதொடர்பில் உரிய மாணவர்கள் தமது பெயர்களை தங்களது கிராம உத்தியோகத்தரிடம் வழங்குமாறு புத்தளம் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக என்றுமில்லாதவாறு புத்தளம் மாவட்டம் வெள்ளத்தினால் மூழ்கியது.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாடசாலை மாணவர்களின் பாதணிகள், ஆடைகள் மற்றும் புத்தகப் பை அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் என்பன வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் அல்லது நீரில் மூழ்கி பழுதடைந்திருந்தால் அம்மாணவர்கள் தமது பெயர் விபரங்களை இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தாங்கள் வசிக்கும் கிராம உத்தியோகத்தர்களிடம் தெரியப்படுத்துமாறும் புத்தளம் பிரதேச செயலகம் கேட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள 0768 507 508 எனும் பிரதேச செயலாளரின் இலக்கத்துடனும், 0713 913 451 எனும் உதவி பிரதேச செயலாளரின் இலக்கத்துடனும், 0775 162 027 எனும் நிர்வாக கிராம உத்தியோகத்தரின் இலக்கத்துடனும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »