கொழும்பில் எமது செய்தியாளரிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் அதில் பங்கேற்றுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது. மக்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலைமை நீடிக்க முடியாது. நாடெங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபமடைந்து வருகின்றன. வீதிகளில் மக்கள் அலை மோதுகின்றது. இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு. அடக்கு முறைகளால் மக்களை ஆள முற்பட்டமையாலேயே அரசு இன்று தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் சிங்கள மக்கள் மட்டுமல்ல பெளத்த தேரர்களும் கைகோர்த்துள்ளனர். இன்று ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது. இனி என்ன நடக்கப்போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது – என்றார்.