பிரித்தானியாவின் லிவர்பூல் பெண்கள் வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை அடுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிப்பு சம்பவத்தில், காரிலிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வாகன ஓட்டுநர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லையென அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 29, 26 மற்றும் 21 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.