பம்பலபிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசலின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சித்த சந்தேகநபரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷிரானி பெரேரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பம்பலபிட்டி எதிமலே வீதியில் வசிக்கும் ஒருவரே, இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போரா முஸ்லிம் பள்ளிவாசல் மீது நேற்று முன்தினம் குறித்த சந்தேகநபர், பெற்றோல் குண்டை வீசி வெடிக்கச் செய்ய முயற்சித்துள்ளார்.
அந்த குண்டு சரியாக வெடிக்காததை அடுத்து, மீண்டும் தனது வீட்டிற்கு சென்று மற்றுமொரு பெற்றோல் குண்டை வெடிக்கச் செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் நடத்த முயற்சித்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் இதுவரை வெளியிடவில்லை என பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.