எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அடுத்த வார இறுதி வரை மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
வரும் விடுமுறையை கருத்தில் கொண்டு பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வீட்டில் இருப்பதே மிகவும் பொருத்தமானது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்று அபாயம் நீடிப்பதால் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.