வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதிக்கு சந்தை வாய்ப்புக்கு உடனடி அமுல் வழங்கப்பட மாட்டாது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது நிதி அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தான் கருத விலை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆறு அல்லது ஏழு மாதங்களாகும வரை வாகன இறக்குமதிக்காக உடனடியாக சந்தைகள் திறக்கப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளாா்.
கொரோனா தொற்றுப்பரவலின் காரணமாகக் கடந்த மார்ச் மாதத்திலிருந்து வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலைமையின் காரணமாக வாகனங்களின் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வாகன இறக்குமதியாளா்கள் தெரிவித்துள்ளனா்.