Our Feeds


Thursday, November 4, 2021

SHAHNI RAMEES

பாடசாலை மாணவர்கள் ஊடாக கொவிட் வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது


 நாட்டில் படிப்படியாக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருவதனால், பாடசாலை மாணவர்கள் ஊடாக கொவிட் வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


எனவே, பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை வழங்குவதை விட, சரியான முறையில் சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதற்கு ஊக்குவிப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள சிறுவர்கள், மத்தியில் பரவி வருகின்ற புதிய கொவிட் வகை திரிபினால், இலங்கையில் உள்ள சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சைனோபார்ம் தடுப்பூசியின் செயல்திறன், 2 - 3 மாதங்களில் குறைவடையும் என சில நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர், இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »