Our Feeds


Saturday, November 27, 2021

SHAHNI RAMEES

நீதிபதி வழங்கிய தீர்ப்பு மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது!

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்றைக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி தீர்ப்பு எங்கள் மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது என எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் இன்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்றைக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி தீர்ப்பு எங்கள் மக்களை கவலை கொள்ள வைத்திருக்கின்றது.

கட்டளையை தான் மீளப்பெற முடியாதென்றும் ஆனால், ஒரு சில திருத்தங்களுடன் குறிப்பாக குாவில்களிலும், தேவாலயங்களிலும் வழிபடலாம் அன்னதானம் கொடுக்கலாம் என்றமாதிரியான சொல்லப்பட்டிருக்கிறதே அன்றி, பொது இடத்தில் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள்.

3 மணிநேரம் எமது சட்டத்தரணிகள் தொடர்ந்து எங்களுடைய சமர்ப்பணங்களை சமர்ப்பித்தும், பொலிஸார் தரப்பின் சமர வாதாடி பல நீதிமர்பணங்களிற்கு எதிர் தரப்பு சமர்ப்பணங்களை சமர்ப்பித்து வாதாடி, பல நீதிமன்றங்கள் குறித்த விடயங்கள் சொல்லப்பட்டும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »