பெருமை பேசுவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் ஏனைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் கடந்த பொதுத் தேர்தலில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகையின் கீழ் போட்டியிட்டனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை. புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்தல், தற்போதுள்ள அரசியலமைப்பில் உத்தேச திருத்தம் போன்ற சில விடயங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் தேவை ஏற்படுகிறது.
அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக கூறுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறினாலும் அரசாங்கம் கவிழாது.கடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் தொடர்புடைய எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என அவர் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளாா்.