குறித்த சம்பவம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நேற்று சுமார் இரவு 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இல 403 திருநகர் தெற்கைச் சேர்ந்த சின்னத்துரை ரஞ்சன் வயது (60) என்பவரே மரணமடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மரணமடைந்தவரின் மனைவி உயிரிழந்தவருக்கு இதற்கு முன்னர் மூன்று தடவை மாரடைப்பு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-கிளிநொச்சி நிருபர் சப்தன்-