Our Feeds


Saturday, November 27, 2021

ShortNews Admin

வீட்டிலுள்ள கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்கின்றன? பாராளுமன்றத்தில் வெளியான காரணங்கள்



வருடாந்தம் 10 முதல் 20 வரையான சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாவதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிக்கின்றார்.


பாராளுமன்றத்தில் இன்று (27) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


லாஃப் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் ஊடாக, 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் மாத்திரம் 23 எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார்.


இந்த காலப் பகுதியில் வீடுகளில் 12 சம்பவங்களும், வர்த்தக நிலையங்களில் 9 சம்பவங்களும், முகவர் நிறுவனங்களில் 2 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக லாஃப் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிக்கின்றார்.


எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்கான காரணங்களை இராஜாங்க அமைச்சர் பட்டியலிட்டார்.


எரிவாயு சிலிண்டருக்காக தரமற்ற உபகரணங்களை பயன்படுத்தல்.

விறகு அடுப்பிற்கு அருகில் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தல்.

மூடிய இடங்களில் எரிவாயு சிலிண்டர்களை வைத்திருந்தல்.

எரிவாயு சிலிண்டர் பயன்பாடு குறித்து தெளிவின்மை.

எரிவாயு சிலிண்டருக்கான தரமற்ற வயர் பயன்பாடு.

சிலிண்டருக்கும், அடுப்பிற்கும் இடையிலான தொடர்பு உரிய வகையில் இணைக்கப்படாமை.

மின்சார கசிவு.

சிலிண்டருக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை உரிய வகையில் முகாமைத்துவம் படுத்தாமை.

வயரின் அளவிற்கு அதிகமான அளவை கொண்ட ரேகுலேட்டர் பயன்படுத்தல்.

சிலிண்டர் வெடிப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்றார்.


சிலிண்டர், எரிவாயு, ரேகுலேட்டர், வயர் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லசந்த அழகியவண்ண தெரிவிக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »