எதிர்வரும் காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (19) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கும்போது,
"நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அனைத்து பாடசாலைகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரு குழுக்களாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்த கவனம் செலுத்தியுள்ளோம். " என்று தெரிவித்தார்.