பொருட்கள் மீதான உத்தேச வரிகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படும். அதாவது அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
புதிய வர்த்தக வரிகள் தொடர்பான விபரங்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டால், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அமைச்சர் கூறினார்.
சந்தையில் சிகரெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தவறியமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த நிதியமைச்சர்,
1947 ஆம் ஆண்டிலிருந்து இது ஒரு பிரச்சினையாக இருந்த போதிலும் எந்தவொரு அரசாங்கமும் பொருட்களின் விலைகளைக் குறைக்க முன்மொழியவில்லை என்றார்.
விநியோக அதிகரிப்பால் மட்டுமே விலையைக் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.