நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்னர் கூறியது போன்று இம்முறை புதிய வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்த நன்மைகளும் இருக்காது என்று அமைச்சர் திலும் அமுனுகம ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
‘ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு நன்மைகள் உண்டு. ஆனால் 2022 இல் இது சாத்தியமில்லை. வழமையான செலவுகள் தொடரும் மேலும் எங்களால் கூடுதலானவற்றை ஒதுக்க முடியும் ஆனால் மக்களுக்கு நன்மைகள் மற்றும் மானியங்களைப் பொறுத்தவரை அது சாத்தியமில்லை என்று அமுனுகம தெரிவித்தார்