(எம்.எம்.சில்வெஸ்டர்)
இது தொடர்பில் இலங்கை ஆயர்கள் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதுடன், இந்த நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கை கத்தோலிக்க ஆயர் சம்மேளனமானது, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பில் அங்கம் வகிக்கும் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, எமது நாட்டில் ஜனநாயக சித்தாந்தங்கள் மற்றும் அதன் மதிப்பும் மகிமையும் அழிந்து போகின்ற நிலை தொடர்பில் ஆழமான கவனத்தை செலுத்தியுள்ளோம்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் இந்நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் எனக்கூறிய வாக்குறுதியை பின்னுக்குத் தள்ளி, மோசமான 20 ஆவது திருத்தத்தை அரசியலமைப்புக்குள் இணைத்துள்ளனர். மேலும், கண்மூடித்தனமாகச் செயற்பட்டு நாட்டின் நலனில் கேடு விளைவித்துள்ளது.
பொது நிர்வாகத்தில், ‘ஒரு நாடு – ஒரே சட்டம்’ என்ற நோக்கத்தை யாரும் எதிர்க்க மாட்டார்கள். எனினும், அது பொது நிர்வாகத்துக்கு சிறந்த துணையாக நாட்டின் அரசியலமைப்பிற்கு இணக்கமாக இருக்க வேண்டும். ஆயினும், விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியாட்களை நியமிப்பதும், ஜனநாயகத்தின் கட்டமைப்புக்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிகளிடம் கூட எந்த ஆலோசனையும் இல்லாமல் இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பது சட்டபூர்வமாக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களை புறக்கணிக்கும் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.