(ஆர்.யசி)
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் விடயங்களில் தமிழ் மக்களின் நிலைப்பாடு, அவர்கள் எதிர்கொள்ளும் அசம்பாவிதங்கள், அவர்களுக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டுள்ள அநியாயங்கள், சட்ட சமமில்லா தன்மைகள், அடக்குமுறைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து தாம் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், அவற்றையெல்லாம் சரியாக ஒன்று சேர்த்து முழுமையான அறிக்கையொன்றை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் “ஒரு நாடு ஒரு சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
“ஒரு நாடு ஒரு சட்டம்” ஜனாதிபதி செயலணியின் வேலைத்திட்டங்கள் மற்றும் தற்போது அவர்கள் வடக்கில் முன்னெடுத்துவரும் ஆய்வு நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
எமக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தில் பாகுபாடு இல்லாது வெகு விரைவில் நிறைவு செய்யவே நாம் முயற்சிக்கின்றோம். இது எம் அனைவரதும் அவசியமான தேவைப்படாகும். ஆகவே அதனை செய்து முடிக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது எனவும் அவர் கூறினார்.